விரைவில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம், கொள்கைகள் அறிவிக்கப்படும்! – கமல்!

201710191945417150_Actor-Kamal-Hassan-explains_SECVPF

சித்தாந்தங்கள் அடிப்படையில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் எனவும்  தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் ஆதரிக்கமாட்டேன் எனவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் சில நாட்களாக எடப்பாடி தலைமயிலான அரசை குற்றம் சாட்டி வந்தார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறி அமைச்சர்களின் வாயை கிளறி தமது அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரம் இட்டார்.

இதைதொடர்ந்து நடிகர் கமலஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே மரியாதை நிமித்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் ரீதியாகவும் ஆலோசனை நடத்தினார்.

சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, விரைவில் கட்சியின் பெயர் மற்றும் சின்னம், கொள்கைகள் அறிவிக்கப்படும் எனவும் மக்களின் தேவை என்னவோ அதுவே தமது தேவை எனவும் குறிப்பிட்டார்.

சித்தாந்தங்கள் அடிப்படையில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் எனவும் மக்களின் நலனுக்காக மட்டுமே கூட்டணி வைப்பேன் எனவும் தெரிவித்தார்.

அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது எனவும் தோல்வி பயம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Leave a Response