மதுசூதனுக்கு எதிர்ப்பு? ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் யார்?

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக ஓபிஎஸ்-எடப்பாடி அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக முதலில் கே.பி. முனுசாமியை நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கே.பி. முனுசாமி தயக்கம் காட்டியதால் மதுசூதனன் வேட்பாளராக்கப்பட்டார்.

அப்போது சசிகலா அணி வேட்பாளராக தினகரன் போட்டியிட்டார். பின்னர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள் இணைந்த நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிசம்பர் 21-ந் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25-1511598718-ops-fasting456566

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் கே.பி. முனுசாமி போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி தரப்பு மற்றொரு வேட்பாளரை நிறுத்தலாம் என ஆலோசிக்கிறதாம்.

இதையடுத்து ஓபிஎஸ்ஸை மதுசூதனன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எடப்பாடியையும் சந்தித்து பேசுங்கள் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இதையடுத்து எடப்பாடியை நேற்று மதுசூதனன் சந்தித்து பேசினார்.

 

முனுசாமிக்கு எதிர்ப்பு:

kppmunusamy_18248இச்சந்திப்பின் போது, அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்கலாம் என நழுவிவிட்டாராம் எடப்பாடி. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது மதுசூதனனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்தலாம் என்பது எடப்பாடி அணியின் நிலை; கே.பி. முனுசாமியை நிறுத்தி வென்றுவிட்டால் அமைச்சர் பதவி கேட்பார் என்பதால் அவருக்கும் நோ சொல்கிறதாம்.

ஆனால் ஓபிஎஸ்ஸோ, நம்ம தலையை உருட்டாமல் இருந்தால் போதும் என நழுவல் போக்கில் இருக்கிறராம். இதனால் ஓபிஎஸ் அணிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response