அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுட்டு இருக்கும் நடிகர்களின் ஆதரவு யாருக்கு?

rk

ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு, டிச., 21ல் தேர்தல் நடைபெறும்’ என, தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதில் ஆளும், அ.தி.மு.க., – தி.மு.க., இடையே, கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க தமிழகத்தில் கால் ஊன்றும் முனைப்பில் இருப்பதால் அது இந்த இடைத்தேர்தலில் முன்னோட்டம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகள் போட்டியிடாது என தெரிகிறது.

thampi

இந்நிலையில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வரும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே அப்போதைய பா.ஜ.க, வேட்பாளர் கங்கை அமரனுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததாக முதலில் பா.ஜ.கவிற்கு அறிவித்தது. பின் அதனை மறுத்தார்.

 

 

அதேபோல் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டு வரும் கமலும் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் ‛அரசியல் கற்க வந்ததாக’ அவர் தெரிவித்தார். எனவே அவர் கம்யூ., கட்சிக்கு ஆதரவு தரலாம் என்று தெரிகிறது. ரஜினி பா.ஜ.கவுக்கும், கமல் கம்யூ., கட்சிக்கும் ஆதரவு தருவார்களா அல்லது நடுநிலை வகிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

Leave a Response