கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லக்ஷ்மி ப்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `ரிச்சி’. இதில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தூத்துக்குடி ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். படகுகளை சரி செய்யும் மெக்கானிக் வேடத்தில் நட்டி நடித்துள்ளார்.
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்தள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் இசை நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து படம் வருகிற 8-ஆம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.