எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம்! உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

high

தமிழக சட்டப்பேரவையில் டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை உரிமை குழு நோட்டீஸ் அளித்த உத்தரவை எதிர்த்த வழக்கு, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏகளை பதவி நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில், கடந்த வியாழனன்று விசாரணைக்கு வந்தது.

இதில் திமுக தரப்பில் வழக்கறிஞர் அமரேந்திர சரணும், டி.டி.வி தினகரன் தரப்பில் வழக்கறிஞர் அபிசேக் சிங்வியும், முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதனும் ஆஜராகினர். அவரவர் தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. இதன்படி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும், அதுதொடர்பான பிற வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன

Leave a Response