நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

fishermen

நாகையை சேர்ந்த மீனவர்கள்  பருத்தித்துறை  அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர்.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை நேற்று கைது செய்த நிலையில் மீண்டும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களது படகையும் கொண்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கப்படுவார்கள் என்றும், விசாரணைக்கு பிறகு அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டாத நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தடுப்பதற்காக மீனவர்கள் மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

img29_jun

இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்று சிறை பிடிக்கப்பட்ட 10 மீனவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவதற்கு முன்னரே மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10-பேருக்கு நவ.30 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. நாகை மீனவர்கள் 10 போரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response