வருமான வரித்துறை ரெய்டால் ஜெயில் வசதிகள் குறைப்பு!

sasikala-

சசிகலா குடும்பத்தை  குறி வைத்து நடத்தப்பட்ட மாபெரும் ரெய்டு இந்திய அளவில் பேசப்பட்டது .ஆனால் இந்நிலையில் சசிகலா  சிறையில்  இருப்பதால், அவரிடம் இது குறித்து எந்த விசாரணையும் இதுவரை  நடத்த வில்லை. இந்நிலையில் சிறையில் சசிகலாவிற்கு  வழங்கப்பட்ட சலுகைகள்  ரத்து செய்யப்பட்டு உள்ளது

வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார்.

sasikalaஇதுவரை சசிகலா, இளவரசி ஆகியோர் வழக்கமான உடைகளையே அணிந்து வருகிறார்கள். விரைவில் அவர்களுக்கு வெள்ளை நிற சீருடை (பருத்தி ஆடைகள்) வழங்கப்பட உள்ளது.

15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவினர் மற்றும் அவருடன் செல்லும் 3 பேர் சசிகலா, இளவரசியை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. வக்கீல்கள் மட்டும் அவர்கள் நினைத்த நேரத்தில் சசிகலா, இளவரசியை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சசிகலா, இளவரசி ஆகியோர் இருக்கும் அறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே இயங்காமல் இருந்தன. தற்போது அவர்கள் அடைக்கப்பட்டு உள்ள அறை அருகே உள்ள கேமராக்கள் இயங்குகின்றன.

sasiமொத்தத்தில் வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.இதனை  தொடர்ந்து அடுத்து வரும் சில  நாட்களில்  சசிகலாவிடம்  கைப்பற்றப்பட்ட  ஆவணங்கள் தொடர்பான  விசாரணையை மேற்கொள்ள  வாய்ப்பு உள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Response