நளினிக்கு முன்கூட்டியே விடுதலை கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்!

nalinilong_17140_08314

 ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினியை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த பொழுது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் உச்ச நீதின்ற முறையீட்டுக்குப் பிறகு நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தணடனைக் காலத்துக்கும் முன்பே தன்னை விடுதலை செய்யுமாறு கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றிணைத்து தாக்கல் செய்தார். அதில் அவர் , ‘ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது.எனவே அதனைப் பின்பற்றி என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தமிழக அரசு சார்பில் பிரமாணப் பாத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை தணடனைக் காலத்திற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Response