ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்- ஆளுநர் துணை முதல்வர் மலர் துவி மரியாதை!

nehru

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேருவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நேருவின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.

பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். நேரு சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tamil-Nadu-Governor-and-leaders-tributes-to-Nehruகுழந்தைகள் தினமான இன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Response