விவசாயத்தை பற்றிய பிரதமரின் பேச்சுக்கு இந்திய அரசை விளக்கம் கேட்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து:


ஏப்ரல் 12, 2013 மாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி,எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது. வைரமுத்து பேசுகையில், விவசாயத்தை பற்றிய பிரதமரின் பேச்சுக்கு இந்திய அரசை விளக்கம் கேட்டார்.

அவர் பேசியதில் ஒரு பகுதி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது:

“இந்த விழாவில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனாலும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தை நான் இந்த வர்கத்தில் சொல்லித்தான் தீரவேண்டும். அண்மையில் இந்திய பிரதமர் ஒன்னு சொல்லி இருக்கிறார். விவசாயிகள் வெகுவிரைவில் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இது எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. ஒருவேளை நான் சொன்ன வார்த்தைதான் பிரதமரும் சொன்னன வார்த்தை என்றால், தயவு செய்து இந்த வார்த்தையின் பொருளை எனக்கு இந்திய அரசாங்கம் விளக்க வேண்டும். இந்தியா விவசாய நாடு என்று கொண்டாடுகிறோமே, இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் என்று சொல்கிறோமே, இந்தியாவில் 65 சதவிகிதம் விவசாயத்தை நம்பி இருக்கிற வாழ்க்கை என்று சொல்கிறோமே, எப்படி விவசாயத்தை விட்டு வெளியேறுவது. வீடு பழுதாகி இருக்கிறது என்று சொல்லுங்கள், வீட்டை சரி செய்து கொடுக்கவேண்டும் என்று சொல்லுங்கள், வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லுவது எப்படி நியாயம் என்று எனக்கு தெரியவில்லை. வல்லபாய் பட்டேல் வெளிநாட்டுக்கு போறான். அவரைப் பார்த்து கேட்டார்கள், “வாட் இஸ் யுவர் கல்ஷர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார், “அவர் கல்ஷர் இஸ் ஆக்ரிகல்ஷர்.” என்று சொன்னார். கலாச்சாரம் பிறந்ததே இந்த வேளாண்மையில் தான், இந்த வேளாண்மையை விட்டுவிட்டு எப்படி தான் இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.”

இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து தான் பேசியபோது இந்திய அரசாங்கத்தை விளக்கம் கேட்டு விண்ணப்பித்தார்.