பிரபல கோயில்களில் தரிசனம் செய்யும் ராகுல்! ஓட்டரசியலை மட்டும் முன்னிறுத்துகிறாரா?

 

குஜராத்தில் உள்ள பிரபல கோயில்களில் ராகுல் காந்தி தரிசனம் செய்தது பற்றி பாஜ – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் டிசம்பர் 9, 14 தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

x13-1510561108-rahul0.jpg.pagespeed.ic.2NcjjsbqnZஏற்கனவே பலமுறை குஜராத்தில் பிரசாரம் செய்துள்ள ராகுல் நேற்று 3 நாள் சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். இதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற அக்‌ஷர்தாம் கோயிலிலும், பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாஜி கோயிலிலும் அவர் நேற்று வழிபாடு செய்தார். இதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

x13-1510561271-rahul-gandhi66.jpg.pagespeed.ic.4wSN_4w_MT

குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறுகையில், ‘‘குஜராத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், ராகுல் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? அவர்களுக்கு பக்தி கிடையாது. தனது முந்தைய பயணத்தின்போது ராகுல் ஏன் எந்த கோயிலுக்கும் செல்லவில்லை? காங்கிரஸ் தனது மதச்சார்பற்ற கொள்கையை கைவிட்டு, இந்துத்துவாவுக்கு மரியாதை செலுத்தி வருகிறது. ஆனால், அவர்களின் தந்திரம் குஜராத்தில் எடுபடாது’’ என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், ‘‘ராகுல் கோயிலுக்கு செல்வதை விமர்சிக்கும் பாஜ.வுக்கு குஜராத் மக்கள் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள். இந்து கோயில்கள் மட்டுமின்றி ஜெயின், குருத்வாரா கோயில்களுக்கும் ராகுல் சென்றுள்ளார்’’ என்றார்.

Leave a Response