சின்னத்திரை நடிகர்கள் சங்க விழா- சண்டக்கோழி நாயகன் பங்கேற்பு!

Chinnathirai2._L_styvpf

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

_poojai vishal 55d

முன்னதாக நடிகர் விஷால், சின்னத்திரை நடிகர்-நடிகைகளின் பெயர், விலாசம், புகைப்படம் அடங்கிய ‘டைரி’ ஒன்றை வெளியிட்டார். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதில் நடிகர் விமல், சின்னி ஜெயந்த், நடிகை குட்டி பத்மினி, நகைச்சுவை நடிகர்கள் சூரி, ரோபோ சங்கர் உள்பட பலர் பங்கு பெற்றனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் போஸ் வெங்கட் நன்றி கூறினார்.

Leave a Response