ஜிஎஸ்டி குறைத்தால் குஜராத்தில் வெற்றி பெற முடியமா- புதுச்சேரி முதல்வர் கேள்வி!

narayana samy puthucherrycm_0

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின் காரணமாக கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 203 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

காங்கிரஸ் கட்சியின் முயற்சியால்தான் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் முயற்சியே.

ஆனால் இதை வைத்து பாஜக குஜராத் தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கிறது .
அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளால் மழையினால் இதுவரை புதுச்சேரியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களை மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

gst

அரசின் தீவிர நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்பட்டுள்ளது .
புதுச்சேரியில் 50-ல் இருந்து 70% அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அடுத்த வாரம் முதல் வறட்சி நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு 7.53 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக காப்பீட்டு நிறுவனம் வழங்க உள்ளது.

ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல்காந்தி நிச்சயம் பிரதமர் ஆவார் என்றார் நாராயணசாமி.

Leave a Response