அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கும் சாட்டையடி – “அறம்” விமர்சனம்…

Aramm Review
அறிமுக இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அறம்’. இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாகவும், அவருடன் ராம்ஸ், சுனு லட்சுமி, ரமேஷ்(காக்கா முட்டை), விக்னேஷ்(காக்கா முட்டை), தன்ஷிக்கா(குழந்தை நட்சத்திரம்), வேலா ராமமூர்த்தி, ஜீவா ரவி, இயக்குனர் E.ராமதாஸ் மற்றும் பழனி பட்டாளம் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை செய்துள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, அப்பாடல்களை உமாதேவி அவர்கள் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கதையின் கரு: திருவள்ளூர் மாவட்டத்தில் நீரின்றி வறண்ட பூமியில் போடப்பட்டிருக்கும் ஒரு ஆழ்துளை கிணற்றில் ஒரு சிறுமி விழுந்துவிடுகிறாள். அந்த குழந்தை காப்பாற்ற நடக்கும் முயற்சி தான் இந்த படத்தின் ஒன்லைன். அப்போ இது தானா கதை அப்பிடின்னு நீங்க யோசிக்கலாம். அது தான் கிடையாது அதில் சமுக அக்கறை கொண்ட கருத்துகள் சொல்லப்படுகிறது. இன்று பாழாகும் இயற்கையின் சீற்றல்களை பற்றி அரசுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி தன்னுடைய வசனங்கள் மூலம் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குனரும் வசனகர்த்தாவுமான கோபி நயனார்.

படத்திற்குள் செல்வோம்… தமிழகத்திலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் இந்த படத்தில் காட்டப்படுகிறது. ஒரு கிராமம் ராகேட் ஏவுதளம் அருகிலுள்ள கிராமம். அங்கு குடிக்க தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். குடிதண்ணீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் தள்ளி சென்று குடி தண்ணீர் கொண்டுவருகிறார்கள். அந்த காட்சிகளுக்கு இடையில் நச்…நச் என்று வசனங்கள் இடம் பெறுகின்றன. அதாவது நான்கு, ஐந்து வருடங்கள் மழை இல்லாமல் இருந்து தண்ணீருக்கு அவர்கள் கஷ்டப்பட்டதில்லை என்றும், தற்போது குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்ததும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று ஒரு வசனம். இதை போல் பல வசனங்கள் அந்த காட்சிகளில் இடம் பெறுகிறது.

ராம்ஸ் அவருடைய மனைவி சுனு லட்சுமி, மகன் ரமேஷ், மகள் தன்ஷிகா மற்றும் மச்சான் விக்னேஷ் ஆகியோர் ஒன்றாக அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். சுனு லட்சுமி தன்னுடைய மகள் தன்ஷிகா அழைத்து கொண்டு மற்ற கிராம பெண்களுடன் முள் மரங்களை வெட்ட செல்கிறாள். அந்த நேரத்தில் திடீன்ரென தன்னுடைய மகள் காணவில்லை என்பதை அறிந்து சுனு லட்சுமியும் அவருடன் இருக்கும் கிராம பெண்களும் தேடி வருகின்றனர். சிறுமி தன்ஷிகா அங்கு தண்ணீர் உரிவதர்காக தோண்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருப்பதை கிராம மக்கள் கண்டு பிடிக்கின்றனர். இந்த விவரம் ஊர் மக்களுக்கு தெரியவர அது காவல் துறை மற்றும், 108 அவசர சேவை ஆகியவைக்கு தெரியப்படுத்தப் படுகிறது. இந்த விவரம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருக்கும் நயன்தாராவிற்கு தெரிய வருகிறது. நயன்தாரா உடனடியாக அந்த ஸ்பாட்டுக்கு செல்கிறார்.

இந்த நேரத்தில் வழியில் தீ அணைப்பு துரையின் லாரி பழுதடைகிறது. அதனால் நயன்தார உட்பட மற்ற அரசு அலுவலர்கள், 108 அவசர சேவை வாகனம் என அனைத்தும் தாமதமாக செல்ல நேர்கிறது. அந்த காட்சியில் அரசையும், அரசு இயந்திரத்தையும் வசனங்கள் மூலம் சாட்டையடி கொடுக்கிறார் இயக்குனர் கோபி நயனார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க நயன்தார தலைமையில் முயற்சிகள் நடைபெறுகின்றது. அந்த காட்சிகள் அனைத்திலும் ஆடியன்ஸ் ஒவ்வொருவரையும் உணர்ச்சிவசப்பட செய்கிறது, கண்ணீர் வரவைக்கிறது என்பது தான் அந்த காட்சிகளும், நடித்துள்ள அணைத்து நடிகர்களின் நடிப்பு திறனும் சொல்கிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்படுகிற முயற்சி என்ன, சிறுமி மீட்கப்படுகிறாரா, ஆழ்துளை கிணற்றுக்கு சொந்தக்காரன் யார், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா, அரசியல்வாதிகள் நயன்தாராவை என்ன செய்கிறார்கள், அரசாங்கம் நயன்தாராவை என்ன செய்கிறது என்பது தான் மீதி கதை.

குழந்தையை மீட்பது தான் படத்தின் காட்சிகள் என்றாலும், ஒவ்வொரு இடத்திலும் சமுக அக்கறை கொண்ட கருத்துகள் வசனங்கள் மூலம் எதிரொலிக்கின்றன. உதாரணத்திற்கு மீதேன் பற்றி சொல்லப்படுகிறது, தண்ணீர்….லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுவது சொல்லப்படுகிறது, ஆழ்துளை கிணறுகள் பராமரிப்பின்றி மூடப்படாமல் இருப்பது சொல்லப்படுகிறது, அரசியல்வாதிகளின் அராஜகம் சொல்லப்படுகிறது. இப்படி பல சமுக அக்கறை உள்ள கருத்துக்கள் வசனங்கள் மூலம் சற்றும் ஆடியன்ஸுக்கு தோய்வு ஏற்படாமல், ரசிக்கும்படி இயக்குனர் கோபி நயனார் காட்சிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் இந்த திரைப்படத்தை ஒவ்வொருவரும் பார்ப்பது “அறம்”, இப்படத்தை பார்த்து இனி நம்மையும் நம்முடைய சந்ததியினரையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் போராடுவதும்ஓர் வகையில் “அறம்” தான்.

நயன்தாரா, ராம்ஸ், சுனு லட்சுமி, பழனி பட்டாளம், குழந்தை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்களுடைய நடிப்பில் எவ்வித செயற்கையும்மின்றி தத்ரூபமாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கலெக்டராக வரும் நயன்தாராவிற்கு விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி ‘மதிவதினி’ அவர்களின் பெயரை தைரியமாக வைத்த இயக்குனரையும், அந்த பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் தைரியமாக ஒத்துகொண்ட நயன்தாராவை பாராட்டியே ஆகவேண்டும். ஜிப்ரானின் இசை கத்தியுடன் பயணிக்கிறது. ரூபனின் படத்தொகுப்பு படத்தை கச்சிதமாகியுள்ளது. ஓம்ப்ரகாஷின் ஒளிப்பதிவு வறண்ட பூமியை கதைக்கு ஏற்றாபோல் கலர் கரெக்ஷன் செய்து ஒளிப்பதிவு செயப்படமைக்கு பாராட்டுக்கள்.

ஹேட்ஸ்ஆப் டு யூ மிஸ்டர் கோபி நயனார்.

Leave a Response