சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, சூரி,அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் தற்போது தமிழகத்தில் நிலவும் கந்து வட்டி, போலி மருத்துவர்கள், பற்றியும் ப்ரண்ட்ஷிப் பற்றியும் பேசியிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.
சந்தீப் கிஷன் தாங்க இந்த படத்துடைய கதாநாயகன், விக்ராந்த், அப்புக்குட்டி, சூரி, இவர்கள் ஹீரோவோட நெருங்கிய நண்பர்கள். நம்ப ஹீரோக்கு எதனா ஒன்னுனா விக்ராந்த் சும்மா இருக்கமாட்டாரு யாரு என்னனு பாக்குறது இல்லை எடுத்ததும் அடி தான். காசுக்காக எது வேணும்னாலும் பண்றதுதாங்க நம்ப வில்லன் வேலையே. ஹீரோ லைனுக்கு கொஞ்சம் லேட்டா வருவாரு, அதுக்குள்ள நம்ப ஹீரோ லைப்ல ஒரு திடீர் சம்பவம் என்னடானு பாத்தா காதல். அவருக்கு மட்டும் வந்தா பரவாயில்லை விக்ராந்துக்கும் காதல் வருது. எந்த பொண்ணு யாருனு யோசிக்க தோணும் அங்கதான் இயக்குனர் சுசீந்திரன் ட்வீஸ்ட் வைச்சு இருக்காருனு தான் சொல்லணும்.
சாதாரணமாவே சூரி, அப்புக்குட்டிலாம் காமெடி நல்லாவே பண்ணுவாங்க. ஹீரோவும் அவங்க கூட அப்பப்ப நல்லா காமெடி பண்ணுவாரு, போறதா குறைக்கு சண்டை கட்சியிலும் காமெடி கொஞ்சம் இருக்கு.
இசையமைப்பாளர் இமான் சூப்பர் ஸ்டார் வசனத்தை வைத்து மிக அருமையாக ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார். அது மட்டுமின்றி படத்துல தான் எல்லாரும் ட்வீஸ்ட் வைப்பாங்க ஆனா சுசீந்திரன் பாடலிலும் வைச்சு இருக்காரு.
படத்தில் ஹரிஷ் உத்தமன் தான் வில்லன். ஒரு கட்டத்தில் விக்ராந்தை ஹரிஷ் உத்தமனின் ஆட்கள் வெட்ட வர, அந்த சம்பவத்தில் இருந்து விக்ராந்த் தப்பித்துக் கொள்கிறார். இந்த நிலையில் விக்ராந்த் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையிலிருந்து விக்ராந்த் வெளியில் வருவதற்குள் சந்திப் கிஷன் அந்த பிரச்சனையின் காரணங்களை கண்டுபிடிக்கிறாரா, இல்லையா. அந்த பிரச்சினையில் இருந்து சந்தீப் கிஷனும், விக்ராந்தும் வெளியில் வருவார்களா இல்லையா அதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.