இந்த ரெயிடுக்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை அடித்து சொல்லும் தமிழிசை!

jaya-tv

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

ஜெயா டிவி, ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் என காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசை விமர்சித்ததாலேயே சோதனை நடத்தப்படுவதாக டிடிவி தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது.

tamilisai1

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக பாஜக தலைவர் :-

மத்திய அரசை விமர்சிப்பதால் சோதனை நடத்தப்படவில்லை என்றார். முதலிடு மீதான புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்படுவதாக கூறினார்.

மடியில் கனம் இல்லாவிட்டால் எதற்கு பயப்பட வேண்டும் என்றும் எந்த தவறும் இல்லாவிட்டால் பதட்டம் எதற்கு என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைத்தத புகாரின் அடிப்படையிலேயே சோதனை நடத்துவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

incom

வருமான வரித்துறை ரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அவர் கூறினார். மேலும் வரு ஏய்ப்பு புகாரிலேயே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

Leave a Response