மோடி- கருணாநிதி சந்திப்புக்கு மைலாப்பூர் அறிவுஜீவிகள் தான் காரணம்!- சு. சுவாமி விமர்சனம்

23172923_1745370515475146_6861843052051102757_n

மோடி கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் ஒன்றுமில்லை அது தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் சிலரின் ஆலோசனை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி தனது பயணத் திட்டத்தில் இல்லாத புது நிகழ்வாக திடீரென திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையாளர் மற்றும் பாஜகவில் உள்ள சிலர் இந்த சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ள சூழ்நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

06-1509975862-modi-meets-karunanidhi

அப்போது செய்தியாளர்கள் பிரதமர் மோடி – கருணாநிதி சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ”திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் ஏதுமில்லை. மோடி போனதற்கு அங்கு உள்ள அறிவுஜீவிகள் ஆலோசனையே காரணம்” என்றார்.

யார் அந்த அறிவு ஜீவிகள் என்ற கேள்விக்கு ”அந்த அறிவுஜீவிகள் மைலாப்பூரில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

23132097_1745370455475152_5117755778777936748_n

2 ஜி வழக்கில் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதே இதற்கு எதாவது காரணம் உண்டா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ”தேதி தள்ளி வைக்கப்பட்டதில் ஒரு பிரச்சினையும் இல்லை. தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் அதை எழுதி முடிக்க நாளாகும். இதில் ஆ.ராசாவுக்கு பாதிப்பு வந்தால் அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வார், எங்களுக்கு பாதகமாக வந்தால் நாங்கள் செல்வோம். அதனால் பார்த்து கவனமாக தீர்ப்பு எழுதுவார்கள், அதனால் தீர்ப்பு தேதி தள்ளிபோவதும் சகஜம் தான்” என்று தெரிவித்தார்.

download

மோடி சந்திப்பு காரணமாக 2ஜி வழக்கில் பின்னடைவு ஏற்படுமா என்று கேட்டதற்கு, ”பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் இல்லை, அவரை நான் நன்கறிவேன். சசிதரூர் நட்பாக பழகினாலும் சசிதரூர் வழக்கில் பிரச்சினை என்றால் தலையிட மாட்டார். அதுபோல் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததால் அவர் 2ஜி வழக்கில் எதிலும் தலையிட வாய்ப்பில்லை, அதனால் 2ஜி வழக்கு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று தெரிவித்தார்.

Leave a Response