நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்!

ANNA_ARIVALAYAM

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகி நவம்பர் 8-ந் தேதியுடன் ஓராண்டாகிறது.

நவம்பர் 8-ந் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றன.

black

தமிழகம் முழுவதும் நவம்பர் 8-ந் தேதி திமுகவினர் கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 8-ந் தேதியன்று நடைபெறாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

Leave a Response