பிரபல தமிழ் நாளிதழை பாராட்டிய பிரதமர்!

thinath
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். இதையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபல பத்திரிகை நிறுவனமான தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி அவரை பூங்கொத்து கொடுத்து, ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமானநிலைய வாயிலில் தமிழக பா.ஜ.க தொண்டர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.தமிழக மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் ஆளுநர், துணை முதலமைச்சர் பங்கேற்றனர்.

பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் நடை பெற்ற தினத்தந்தி பவள விழாவில் கலந்து கொண்டார் மோடி .

விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர். நல்லக்கண்ணு, வைகோ, சீமான், சரத்குமார், நடிகர் பிரபு உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

மேலும் பிரதமர் மோடியை, தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றார். ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரையும் தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றார்.

இந்த பவள விழாவில் பிரதமர் பேசியதாவது:-

தினத்தந்தி பவள விழாவில் தமிழில் வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடி, பவள விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்

வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் – தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி உறுதி

24 மணி நேரமும் செய்தி தொலைக்காட்சிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது, ஆனாலும், காலையில் கையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை

தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவருவது மாபெரும் சாதனை

எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம்

அஞ்சல்துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்த தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது, ஆனால் 75 ஆண்டுகளை கடந்து செய்திகளை தந்தியாக தினத்தந்தி கொடுத்து வருகிறது

பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன

பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர் என்றும் பிரதமர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response