தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்கு என்று ஒரு தனிப் பெயர் இருந்தது. ‘காதல் இளவரசன்’ என்று பட்டப் பெயரில் அழைக்கப்பட்டாலும், கிசுகிசுக்களில் எல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘முத்த நடிகர்’ என்று தான் அப்போது குறிப்பிடுவார்கள். அந்தக் காலத்திலேயே அவர் படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு முத்தம் தந்து நடித்ததால் அவருக்கு அந்தப் பெயர் வந்தது. காலப் போக்கில் அவரும் முத்தம் கொடுப்பதை குறைத்துக் கொண்டுவிட்டார்.
கமல்ஹாசன் விட்டதை இப்போது சித்தார்த் பிடித்துக் கொண்டுவிட்டார். சித்தார்த் நடித்து நேற்று வெளியான ‘அவள்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. படத்தில் அவர் மனைவியாக நடித்திருக்கும் ஆன்ட்ரியாவிற்கு முத்த மழை பொழிந்திருக்கிறார்.
மாடர்ன் ஆக கதை யோசிப்பவர்கள் ஆன்ட்ரியாவைத் தங்களது படங்களில் நாயகியாக நடிக்க வைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது. அவர்களது எண்ணங்களுக்கு ஏற்பட ஆன்ட்ரியாவும் கிளாமராக நடித்து வருகிறார்.கிளாமராக நடிப்பது வேறு, ஆனால், ஒரு படத்தில் இத்தனை முத்தக் காட்சிகளில் நடிக்க அவர் எப்படி சம்மதித்தார் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
படத்தில் கணக்கிட முடியாத அளவிற்கு சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டு நடித்துள்ளார்கள். ‘ஏ’ படம்தான் என்றாலும் தமிழ் சினிமாவில் இதுவரை இவ்வளவு முத்தக் காட்சிகள் கொண்ட படங்கள் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம்.’ஏ’ சான்றிதழ் வழங்கினாலும் தணிக்கைக் குழுவினர் எப்படி இத்தனை முத்தக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கினர் என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது.
படத்தின் பெயர் ‘அவள்’ என்று வைத்துவிட்டு சித்தார்த், ஆன்ட்ரியா போட்டோக்கள் மட்டும் போஸ்டர்களில் இல்லை என்றால் அது ‘வேற மாதிரி மலையாளப்’ படமாக அமைந்திருக்கும்.