மீண்டும் பலத்த மழை கொட்ட தொடங்கிவிட்டது!

chennai

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 4 நாள்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இலங்கைக்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில், நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று நகர்ந்து, தற்போது, இலங்கைக்கும், தமிழக கடலோர பகுதிகளுக்கும் இடையே நிலை கொண்டிருப்பதால் மேலும் இரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

pagespeed

இந்நிலையில் வளசரவாக்கம்,அண்ணாநகர்,நெற்குன்றம்,முகப்பேர்,திருவல்லிக்கேணி,ராயப்பேட்டை,மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்ட தொடங்கிவிட்டது.ஏரிகளின் கொள்ளளவு நிரம்பும் நிலையில் மேலும் மேலும் மழை கொட்டுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response