சண்டக்கோழியில் இருந்து மீண்டும் இரும்புத்திரைக்கு வந்த விஷால்!

Vishal-turns-pr7429
விஷால் நடித்து தயாரிக்கும் படம் தான் சண்டக்கோழி இரண்டாம் பாகம் மற்றும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தை முடித்து விட்டு இரும்புத்திரை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மித்ரன் இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், ரோபோ சங்கர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் விஷால் தயாரிப்பில் உருவாகும் மற்றுமொரு படமான சண்டக்கோழி இரண்டாம் பாகத்தையும் ஆரம்பித்து கடந்த சில வாரங்களாக சென்னை பின்னி மில்லில் மதுரை வீதிகளின் செட்போட்டு படமாக்கி வந்தார்கள், முதல்கட்ட படப்பிடிப்பிடிப்பு இன்னும் நான்கு நாட்கள் மீதம் இருந்த நிலையில் கடும் மழை பெய்த காரணத்தால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

அதோடு இரும்புத்திரை படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதால் சண்டக்கோழி படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டு இரும்புத்திரை படப்பிடிப்புக்கு வந்து விட்டார். மழையையும் பொருட்படுத்தாமல் சென்னையின் முக்கிய வீதிகளில் இரும்புத்திரையின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகி வருகிறது. இரும்புத்திரை படபிடிப்பு முடிந்தவுடன் வரும் டிசம்பர் மாதத்திலிருந்து சண்டக்கோழி படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Response