ஆக்சன் மகனுக்காக மீண்டும் இயக்குனராகும் பிரபல நடிகர்!

Thambi-Ramaiah’s-role-revealed
வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவர் நடிகர் தம்பி ராமய்யா. இவர் குணசித்ர நடிகர் மற்றும் இயக்குனரும் கூட. இவருடைய மகன் உமாபதி “அதாகப்பட்டது மகாஜனங்களே” என்ற படத்தின் மூலம் நம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

அந்தப் படம் சரியாக அமையவில்லை. இதனால் மகனை ஹீரோவாக ஜெயிக்க வைக்க தம்பி ராமய்யாவே தயாரித்து, இயக்கும் படம் “உலகம் விலைக்கு வருது”. இது முழுநீள காமெடி படமாக உருவாகிறது. இதில் உமாபதிக்கு ஜோடியாக மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, பவன், நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் இசை அமைக்கிறார்.இதன் படப்பிடிப்புகள் புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தப்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் நடனமாடினார்கள். தொடர்ந்து புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது.

Leave a Response