பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழைநீர் தேங்கவில்லை- அமைச்சர் பகிரங்க தகவல்!

rain-bus

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் வேலுமணி, செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமெரிக்கா, லண்டன், பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று கூறினார்.

சென்னையில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 95 சதவீதம் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

mazhai1

மழை நீர் தேங்கிய பகுதிகளில் அதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் வேலுமணி, வேளச்சேரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது என்று கூறினார்.

சென்னையின் அனைத்து மண்டலத்துக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமித்துள்ளதாகவும் கூறினார். மழைநீர் தேங்கியுள்ளது குறித்து பொதுமக்கள் புகார் கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக கட்டுப்பாட்டு அறையில் 75 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

velumani

அடையாறு மற்றும் கூவத்தில் 45 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இருந்தும் திமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.

Leave a Response