இரட்டை இலை விவகாரம்: வழக்கை மேலும் இழுத்தடிக்க அவகாசம் கோரியுள்ள தினகரன் தரப்பு!

twoleaves_16236_09233

இந்த நிலையில் நீளமான வாதங்களை முன்வைத்து தினகரன் தரப்பினர் நேரத்தை விரயமாக்குவதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தினகரன் தரப்புக்கு புதிதாக பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளதாகவும், விரைவில் புதிய மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தகவல் அளித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தபோது, ‘இரட்டை இலை விவகாரத்தில் இறுதி உத்தரவையே எங்களிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் உறுதியளித்துள்ளனர்.

Leave a Response