சென்னையில் கொட்டி தீர்க்கும் மழை- உற்சாகத்தில் மக்கள்!

AMBATTUR

அண்ணா நகர் மேற்கு, அம்பத்தூர், வளரசரவாக்கம், கோயம்பேடு, முகப்பேர், அம்பத்தூர் எஸ்டேட், பேரூர், மதுரவாயல், நெற்குன்றம், நொளம்பூர் பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மழை கொட்டியது.

அண்ணா நகரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது என்றால் அதன் ஆக்ரோஷ அளவை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். அதாவது 10 செ.மீ பெய்துள்ளது.

2015ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஒரே நாள் இரவில் சுமார் 50 செ.மீ மழை பெய்தது. இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்துதான் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்டன. வடகிழக்கு பருவமழையின் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு அபார மழை பெய்துள்ளது மகிழ்ச்சியோடு கொஞ்சம் அச்சத்தையும் சென்னை மக்களிடம் தூவி சென்றிருக்கும்.

vanilai12

சென்னையில் இன்று நாள் முழுக்க மழை தொடரப்போகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை கொட்டப்போகிறது. இந்த வானிலையை பஜ்ஜி, காபி, டீயோடு கொண்டாடி வருகிறார்கள் சென்னைவாசிகள். அந்த கொண்டாட்டத்தை வடை, போண்டா என்று நீட்டித்துக்கொள்ளலாம். பயப்பட தேவையில்லை என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

chennai-rain

வெள்ளம் பெருக்கெடுத்துவிடுமோ என்று அச்சம் கொள்ளத்தேவையில்லை. மழை மழையாகத்தான் பெய்யுமே தவிர பேய் மழையாக பெய்து மிதக்கவிடாது என்று உறுதியளிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

mazhai

வானிலை விவகாரத்தில், வெதர்மேன் கூறுவது பெரும்பாலும் அப்படியே நடப்பதால், சென்னை மக்கள் ஜாலியாக இந்த மழையை கொண்டாடலாம். செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போடலாம், வீடியோ எடுத்து டிவிட்டரில் ஷேர் செய்யலாம். ‘மாமழை போற்றுதும்’ சென்னையன்ஸ்.

Leave a Response