ஓராண்டு ஓய்வுக்கு பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுக தலைவர்!

 

vikram

உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி எந்த நிகழ்ச்சியும் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடந்த வாரம் திடீரென சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். கருணாநிதியின் திடீர் வருகை திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

karunanidhi

இந்த நிலையில், மு.க.முத்து மகள் வழி பேரனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனுரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக் ஷிதாவுக்கும் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

consent

மணமக்கள் இருவரும் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசிப் பெற்றனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை கருணாநிதி பார்த்து கையசைத்து வரவேற்றார். ஓராண்டு ஓய்வுக்கு பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response