மத்திய அரசு மீது குற்றம்சாட்டிய அமைச்சர்!

resan

தமிழக அரசு ரேசன் சர்க்கரை விலையை கிலோ ரூ.13.50-ல் இருந்து கிட்டதட்ட இரு மடங்காக 25 என உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “கூட்டுறவு சங்க கடைகளில் போதுமான கையிருப்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். நியாயவிலை கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.

Sellur-Raju

மேலும், “சர்க்கரை விலையேற்றம் சாதாரணமானதுதான். எதிர்க்கட்சிகள் என்றால் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.” என்ற செல்லூர் ராஜூ, “ரேசன் சர்க்கரைக்கு மத்திய அரசு அளித்துவந்த மானியத்தை நிறுத்திவிட்டது. ஆகவே விலையேற்றம் என்பது அவசியமாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

Leave a Response