2 மணி நேரம் 20 நிமிடங்களாம் சூப்பர் ஸ்டாரின் 2.0!

TCMVqg9
இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று நடைபெற்றது. படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் இரு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் பேசிய வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன், உலகமெங்குமுள்ள 11 ஸ்டூடியோக்களில் 2.0 படத்தின் கிராபிஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களுக்குச் சிறந்த அனுபவம் கிடைப்பதற்காக அனைவரும் கடும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள் என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றார். இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தக் கால அளவு, ஷங்கர் படங்களில் மிகக்குறைந்ததாகும். 3டி படம் என்பதால் மற்ற ஷங்கர் படங்களை விடவும் குறைந்த கால அளவு கொண்ட படமாக 2.0 உள்ளது.

Leave a Response