ட்விட்டரில் மட்டுமல்ல, களத்திலும் இறங்கிய கமலஹாசன்…

Kamalhassan at Ennore
சமீபகாலமா நடிகர் கமலஹாசன் தமிழக அரசை கிழி கிழி என்று கிழித்து வருகிறார். அதற்க்கு ஆளும் அ.தி.மு.க’வினர் மற்றும் தமிழக ப.ஜ.க’வினர் ட்விட்டரில் மட்டும் தான் கமலஹாசன் பேசுவார், அவர் களத்தில் இறங்கி பார்க்கட்டும் என்று கிண்டலாக சவால் விட்டுவந்தனர். இந்நிலையில் கமலஹாசன் பொதுநலனுக்காக களத்தில் இறங்கினார்.

கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல்கழிவுகளை கொட்டுவதாக கமல் புகார் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நடிகர் கமலஹாசன், இன்று காலை சுமார் 6:00 மணி முதல் 7:30 மணிக்குள்ளாக சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் அங்கு ஆய்வு செய்தார். இவருடன் சமுக ஆர்வலர் நித்யானந்தம் சென்றிந்தார்.

சென்னை எண்ணூர் பகுதி மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்தும் கமல்ஹாசன் கேட்டறிந்தார். ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தநிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் வகையில் முதன்முறையாக களத்தில் இறங்கினார் கமல்.
1

2

3

4

5

6

Leave a Response