சினிமா பைரசியை ஒழிக்க உண்மையிலே நடவடிக்கை எடுக்கும் கேரளா காவல்துறைக்கு ஒரு ‘ஓ’ போடலாம்!

kerala1

பி. உன்னிகிருஷ்ணன் இயக்கி, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் மோகன்லால் கதாநாயகனாகவும்  வில்லனாக விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லன், இத் திரைப்படம் இன்று கேராளாவில் வெளியிடப்பட்டது. திரைப்பத்தின் முதல் காட்சியில் படம் பார்த்த நபர் அப் படத்தை அவருடைய கைபேசியில் விடியோ பதிவு செய்வதாக  காவல் துறையினருக்கு மர்ம நபர் ஒருவர்  தகவல் தெரிவித்துள்ளார். கேரளா காவல்துறையினர் அந்த திரையரங்கிற்கு சென்று அந்த நபரின் கைபேசியை சோதனை செய்ததில் அவர் திருட்டு தனமாக படத்தை விடியோ பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடைப்பெற்று வருகிறது.

ஆனால் தமிழகத்தில் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டதும் சில நிமிடத்தில் இணையதளம் வழியாக வெளியிடப்படுகிறது. தற்போது கூட பா ஜ க தலைவர் எச்.ராஜா மெர்சல் திரைப்படத்தை இணையதளம் வழியாக  படம் பார்த்ததாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார் ஆனால் தற்போது வரை தமிழக காவல்துறை இதுவரை அவர் மீது வழக்கு பதிவும், நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
Kerala Police arrest Video Pirate

kerala2
கேராளா காவல்துறை ஒரு தகவல் கிடைத்த  உடன் அதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்தற்கு கேரள காவல்துறைக்கு ஒரு போடலாம். ஆனால் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை திருட்டு தனமாக இணையத்தளத்தில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை முடக்கவோ, ஒழிக்கவோஎந்த வகையிலும் முயற்சி செய்யவில்லை என்பது இதன் முலம் தெரிகிறது.  கேரள காவல்துறையின் உடனடி நடவடிக்கையை பார்த்தாவது தமிழக காவல்துறை விசிடியை ஒழிக்க முயற்சி மேற்கொள்ளுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

Leave a Response