திருவண்ணாமலை அருகே வனத்துறையினரை தாக்கிய பொது மக்கள்!

thiru
திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மணல் அள்ளியபோது வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து வனத்துறையினருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும் வனத்துறையினரை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response