கேரளானா கேரளா தாங்க- பட்டைய கிளப்புறாங்க!

Kerala-High-Court

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. கேரளா மதுபான வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தி வரும் மதுக் கடைகளில் பணிபுரிவதற்கு வாய்ப்பு அளிக்கஉத்தரவிடக் கோரி, பல பெண்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

kerala

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மதுக் கடைகளில் உள்ள பணியிடங்களில் பெண்களையும் நியமிக்க வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே கேரள மதுபான வாரியம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகப் பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், மதுக் கடைகளிலும் பெண்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

Leave a Response