நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடு!

arun

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் ஜிஎஸ்டி பாதிப்பும் எதிரொலிக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆகியோர் நேற்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஜிஎஸ்டி விவகாரத்தில் பல சலுகைகள் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Response