மீனவர்கள் வயிற்றில் அடிக்கும் மீன்வளத்துறை அமைச்சரும் அவரது உறவினர்களும்!

kasi1

மீன்பிடி படகில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் சீன எஞ்சினை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசிமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்பிடிபடகில் சீன எஞ்சினை பயன்படுத்தக்கூடாது. ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள், சீன எஞ்சினை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. கடந்த 10 நாட்களாக அவர்கள் மீன்பிடிபடகில் சீன எஞ்சினை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

jeyakumar

இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மீனவர்கள், சென்னை காசிமேட்டில் சூரிய நாராயணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒருமணி நேரமாக போராட்டம் நடத்திய மீனவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆண், பெண் என பாரபட்சம் இல்லாமல் தடியடி நடத்தப்பட்டது. இந்த களேபரத்தில்  மாநகராட்சி பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

kasi2

போலீசார் தடியடி நடத்தியபோதும் மீனவர்கள் கலைந்துசெல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

ஜெயக்குமாரின் உறவினர்கள், சீன எஞ்சின் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதால் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காததால் வருமானத்திற்கு வழியின்றித் தவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

kasi

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக மீனவப் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Response