மரியாதைக்குரிய ஹெச்.ராஜாவுக்கு மரியாதை குறைக்க வேண்டும்- பிரபல நடிகர் கருத்து!

images

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் ஜிஎஸ்டி தொடர்பாக இடம்பெற்றுள்ள வசனங்கள் பாஜக கட்சித் தலைவர்களுக்கு கடும் ஆத்திரத்தினை கிளப்பியுள்ளது.

தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து மெர்சலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் தற்பொழுது பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா, ”மெர்சல் காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்” என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

எச்.ராஜாவின் இந்த அடாவடி பேச்சு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கூறியிருப்பதாவது:

raja

கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்து விடுவார்களோ?.

வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!

மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..! நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!

இவ்வாறு பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Response