கேரளாவில் முழு அடைப்பு : தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!

mtc

 

பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சி பந்த் நடத்துவதன் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

 

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும்  மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதே போன்று பாலக்காடு செல்லும் கோவை பேருந்துகள் வேலந்தாவளம் எல்லையில் நிறுத்தப்படுகின்றன.முழு அடைப்பை முன்னிட்டு மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

 

வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பினராய் விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றி அமைப்பதை நிறுத்த வேண்டும்,  விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதனால் கேரளாவில் இருந்து  பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Response