‘மெர்சல்’ படத்துக்கான தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்

அட்லி  இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. மூன்று வேடங்களில் முதல் முறையாக விஜய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.
Mersal-teaser

இந்நிலையில்மெர்சலைதீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கும் நிலையில், ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மெர்சல்என்ற படத்தின் பெயரில் படத்தை வெளியிட வழக்கு கோரியிருந்தார்


ஏனென்றால், 2014-ம் ஆண்டு ஏ.ஆர்ஃபிலிம் ஃபேக்ட்ரி எனும் நிறுவனம் ‘மெர்சல் ஆயிட்டேன்’  என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் `மெர்சல் படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அப்போது மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் தடை நீங்கும் வரை படம் குறித்து விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றம்மெர்சல் படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ‘மெர்சல்படத்தை வெளியிடவும் விளம்பரப் படுத்தவும் இருந்த தடை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. அதனால், ‘மெர்சல்ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Response