நடராஜன் நலமாக உள்ளார்! -மருத்துவமனை வட்டாரம் தகவல்.

புதிய பார்வை ஆசிரியரும்,  சசிகலா கணவருமான நடராஜனுக்கு  குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து. அவர்   நலமாக உள்ளதாக   மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் நடராஜன், சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்தார்.  அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கான தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி தினகரன் கூறிவந்தார்.

18VBG_NATARAJAN

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூளைச்சாவு அடைந்த ஒரு வாலிபரின் உடல் உறுப்புகளை, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது ,  சசிகலா கணவர் நடராஜனுக்கு குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தாகவும். அவர்  நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Response