‘லீடர்’ராக மாறுகிறார் கமல்ஹாசன்?!

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் தற்போது ‘லீடர்’ராக மாறுகிறது!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்திற்கு தலைப்பு தற்போது ‘லீடர்’ என்று வைக்கப்பட்டுள்ளது.

201706052224098934_Its-a-plea-SOS-from-regional-cinema-to-our-FM-kamal-hasan_SECVPF
 

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் ‘இந்தியன் 2’. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது ‘லீடர்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். மேலும் மக்களுக்கு நல்லது செய்வதற்காக முதல்வராக வருவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கு ‘லீடர்’ என்ற டைட்டிலை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் வைக்க கமல் மற்றும் ஷங்கர் இணைந்து முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஆளுங்கட்சியை தாக்கும் வகையில் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும்,சாதரணமாகவே கமல் படங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response