‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!

Actor-Aari-floats-a-new-company-to-help-filmmakers

 

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்
எம்.சி.ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும், அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும், அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார். எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.

எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தேன்.. அது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார். இது சம்பந்தமான ஆவணங்கள் காவல் நிலையத்தில் உள்ளது

‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்.
Page 03

ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் தான் ‘இங்கிலிஷ் படம்’ போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன் தவறான நோக்கத்தில் காட்டவில்லை.

ஊடக நண்பர்கள் வெளியிட்ட செய்தியினை இங்கிலீஷ் படத்தின் இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு ” இங்கிலிஷ் படம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் அந்த இயக்குனர் குறித்து நான் புகார் அளித்ததாகவும் தவறாக செய்தியை அறிந்ததாக கேள்விப்பட்டேன். அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மற்றபடி ‘இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை. இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

Page 01

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன். நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

Page 02

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்”என்றார். இத்துடன் அவர் புகார் அளித்த நகலையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆரி கடந்த வாரம் தனது பெயர் சமூக வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response