அர்ஜூன் ரெட்டி’ ரீமேக் மூலம் அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் துருவ்!

dhruvvikram_goodnight_19616_t

விக்ரமின் மகன் துருவ், வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் ஒரு குறும்படத்தையும் உருவாக்கிய நிலையில் தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது .தெலுங்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி இருந்து. இந்நிலையில் கேரள நிறுவனமான இ4 எண்டர்டைண்மெண்ட் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையை வாங்கி உள்ளது.
இதனை அடுத்து தமிழில் இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஒப்பந்தமாகி உள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

1436374689_vikram-son-dhruv-krishna-image
இந்த படத்தில் ஏற்கனவே தனுஷ் உள்பட ஒருசில நடிகர்கள் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது துருவ் அறிமுகமாவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், நாயகி மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனை விக்ரம் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். தமிழ் ரீமேக் உரிமை விற்பனை ஆனதால் தமிழகத்தில் அந்த படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

துருவ், ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Response