இளைஞர்கள் தாராளமாய் ரசிக்க சிரிக்க Aகப்பட்ட சங்கதிகள்… ‘ஹரஹர மகாதேவகி’ சினிமா விமர்சனம்

hara-hara-mahadevaki-movie-review

இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சிக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் என கலந்து கட்டி காமெடியாக படமெடுத்து ‘அடல்ட் காமெடி படம்’ என வெளியிடுவது பல்வேறு மொழிகளில் நடைமுறையில் இருக்கிறது.

தமிழில் அந்தளவுக்கு தரை லோக்கலாக யாரும் இறங்குவதில்லை. எல்லாவற்றுக்கும் ஆரம்பம் வேண்டுமே! ‘த்ரிஷா இல்லாட்டி நயன்தாரா’ படம் ஆரம்பித்து வைத்தது… இதோ அந்த வரிசையில் அடுத்ததாய் ‘ஹரஹர மகாதேவகி!’

மூன்று டிராவல் பேக்குகளின் மீது டிராவல் ஆகிற கதை.

ஒரு டிராவல் பேகில் தன் காதலி நிக்கிகல்ராணி கொடுத்த கிப்ட் பொருட்கள் இருக்கிறது. அதை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார் கவுதம் கார்த்தி! இதற்கான காரணம் என்ன?

கவுதம் கார்த்தியிடம் இருப்பது போன்ற இன்னொரு பேகில் வெடிகுண்டை வைத்துக் கொண்டு மொட்டை ராஜேந்திரனும் கருணாகரனும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாம் யாரை போட்டுத்தள்ள வைக்கப்பட்டுள்ளது?

மொட்டை ராஜேந்திரனிடம் இருப்பது போன்ற பேக்கை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிறது இன்னொரு பேக். அதில் கள்ள நோட்டுகளை வைத்துக் கொண்டு நல்ல நோட்டாக மாற்றுவதற்காக அல்லாடிக் கொண்டிருக்கிறார் பால சரவணன். அவர் தன் திட்டப்படி நோட்டுகளை மாற்றினாரா? இல்லை போலீஸிடம் மாட்டினாரா?

மேலே சொன்ன மூன்று பேக்குகளும் அவரிடம் உள்ளது இவரிடம் இவரிடம் உள்ளது அவரிடம் என இடம் மாறிப் போவதில் நடக்கும் கூத்துகள்தான் கதை!

அடல்ட் காமெடி சப்ஜெக்ட் என்பதால் அங்கங்கே என்னென்ன சேர்க்க வேண்டுமோ அதையெல்லாம் சேர்த்துக் கலக்கி குலுக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

கவுதம் கார்த்திக்குக்கு ஹீரோவுக்கான எந்த அலட்டலும் இல்லாமல் ஜாலியாய் வந்து போகிற யூத்து கூத்து கதாபாத்திரம். அப்படியே வந்து போகிறார்…ரசிக்கும்படி!

கவுதம் கார்த்தியை ‘டாடி மம்மி வீட்டில் இல்லை, விளையாடுவோமா?’ என்றழைக்கும் இளமைக் குதிரையாய் நிக்கி கல்ராணி! 18 பிளஸுக்கு தேவையானதை தளதளவென பரிமாறியிருக்கிறார்… அடக்க ஒடுக்கமாய்!

Nikki-Galrani-424x640

மூன்று பேக்குகள் இடம் மாறுவதோடு கிளைக்கதையாக குழந்தையொன்று கடத்தப்பட்டு அதை போலீஸ் மீட்பதாக மற்றொரு சென்டிமென்ட் டிராக் இருக்கிறது. இதில் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் வருகிறார், பாராட்டும்படி நடித்தும் உள்ளார்!

ஒரு பக்கம் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, இன்னொரு பக்கம் பாலசரவணன் வேறொரு டிராக்கில் சதீஷ், மயில்சாமி, நமோ நாராயணன் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் கிச்சுக்கிச்சு!

மனோபாலா ஆடிப்பாடும் ‘ஹரஹர மகாதேவகி…’ பாடல் ஹம்மிங் செய்யும்படியிருக்கிறது. மற்றவை ஓகே சொல்லும்படி மட்டுமே!

‘ஹரஹர மகாதேவகி’ என்ற பெயரில் ‘என்ன்ன்ன்னோட பக்க்க்க்தா ஒருத்தன் பஜ்ஜ்ஜ்ஜனை பண்றதுல படுடுடு கில்லாடி…’ என வாட்சப்பில் வந்து கிளுகிளுப்பைத் தந்து கொண்டிருந்த குரலும் அந்த இரட்டை அர்த்த வசனங்களுமே இந்த படத்துக்கு போதுமென தீர்மானித்து விட்டது போலிருக்கிறது திரைக்கதை!

படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் அதற்கான காட்சிகளும் இருக்கிற அளவுக்கு காமெடி இல்லை என்பது மைனஸ்!

இளைஞர்களுக்கு பிடிக்கும்படியான படத்தைக் கொடுப்பது மட்டுமே இயக்குநரின் நோக்கம். அதை ஓரளவு சரியாகவே செய்திருக்கிறார்!

Leave a Response