சித்தூர் அருகே கார் விபத்து; காரைக்காலை சேர்ந்த இருவர் பலி!

car accitant

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பும் வழியில் சித்தூர் அருகே கார் விபத்துக்குள்ளாகி இருவர் மரணமடைந்தனர்.

காரைக்காலைச் சேர்ந்தவர் மோகன். இவர் தன் குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்த்தார். பின்பு, காரில் காரைக்கால் நோக்கித் திரும்பி வந்தார். அப்போது சித்தூர் ரயில்வே கேட் அருகே லாரி ஒன்று நின்றுகொண்டிருந்ததது.

அந்த லாரி மீது மோகனின் கார் வேகமாக மோதியது. அதில் கார் நொறுங்கி அதில் இருந்த இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆள் இல்லா ரயில்வே கேட் அருகே தண்டவாளங்களைக் கடக்க முயன்று நடக்கும் விபத்துகள் போல, நின்று கொண்டிருக்கும் வாகங்களின் மீது மோதி அதிகம் விபத்துகள் நடக்கின்றன.

Leave a Response