பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு!

NIRMALA
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 3-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதில், வர்த்தக துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டது.

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் இதன் மூலம் பெற்றார்.

இந்நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அருண் ஜெட்லி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்!

Leave a Response