இனி அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க தேவையில்லை…உயர்நீதிமன்றம் கருத்து!

high-court5667-14-1465904295
ஓட்டுநர்கள் இனி அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி (இன்று ) முதல், அனைத்து வாகன ஒட்டிகளும், கண்டிப்பாக தவறாமல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் வாகன சட்ட பிரிவு 139 இன் படி, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க தேவை இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

மேலும், திடீரென இது போன்ற ஒரு முடிவை மாநில அரசு எடுக்க காரணம் என்ன எனவும், அதற்கான விளக்கத்தையும் அரசு தரப்பில் தெரிவிக்க ஏதுவாக, விசாரணையை இன்று பிற்பகலுக்கு மாற்றப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Response