சவால் விட்ட வெல்லமண்டி நடராஜன் அதிரடி நீக்கம்!

natrajan

அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.

அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி ஆகியோரும் அடங்குவர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வெல்லமண்டி நடராஜன்:-

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சியில் இணைந்தார் எனவும், எடப்பாடி பழனிசாமியை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் அல்ல எதையும் எதிர்கொள்வார் எடப்பாடி பழனிசாமி எனவும், முடிந்தால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி பார்க்கட்டும் என சவால் விடுத்தார்.

இந்நிலையில் வெல்லமண்டி நடராஜனை டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response