ராம் ரஹீம் சிங் ஆசிரமத்திற்கு சீல் வைத்ததால் டெல்லியில் கலவரம் துவங்கியது!

gurmeet

கடந்த 2002 ஆம் ஆண்டு தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் 2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஜ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கங்கே 144 தடை உத்தரவும் போடப்பட்டது.

delli

இதையடுத்து ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஜ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை கேட்டு ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் தடை உத்தரவையும் மீறி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொளுத்தி வருகின்றனர்.

இந்த கலவரத்தில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்களை முடக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டனர். கலவரத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு ராம் ரஹீம் சிங்கின் சொத்துக்களில் இருந்து வழங்கவும் அறிவுறுத்தியது.

அதன்படி இன்று ஹரியானா மாநிலத்தில் ராம் ரஹீம் சிங்கின் இரண்டு ஆசிரமங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கலவரம் டெல்லியிலும் பரவியது. இந்த நிலையில் செப்டம்பர் முதல்வாரம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Response