‘பிக்பாஸ்’ டீம் நடிக்கும் படம்; ‘ஓவியாவை விட்டா யாரு!’

oviya

ஓவியா நடித்துள்ள ’ஓவியாவை விட்டா யாரு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

vayapuri

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாகி விட்டார் ஓவியா. அவரை வைத்து படமெடுக்க பலரும் விரும்புகின்றனர்.

முன்பு சீனி எனும் பெயரில் எடுக்கப்பட்ட படத்தை ஓவியா ரசிகர்களை ஈர்ப்பதற்காக ‘ஓவியாவ விட்டா யாரு’ என பெயர் மாற்றியுள்ளனர்.

kanja-karuppu

அவர் நாயகியாக நடித்துள்ள ’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை மதுரை செல்வம் தயாரித்துள்ளர். ராஜதுரை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி இவர்களோடு பிக்பாஸ் டீம் கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இன்னொரு ஹைலைட் அம்சம் இந்த படத்துக்கான பாடல்களை எழுதி இருப்பது ‘பிக்பாஸ்’ சினேகன்!

sinekan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஓய்வெடுத்து வருகிறார் ஓவியா. இப் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் இப் படத்தை திரையில் காண மிகவும் ஆர்வமுடனுள்ளனர்.

Leave a Response