“எம்புள்ளைக்கு கல்யாணம்!” -அற்புதம்மாள் விறுவிறு ஏற்பாடு

perrivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து அவர் நேற்று பரோலில் விடுவிக்கப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

26 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதால் அவரைக் காண ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். அவரது வருகையை அவரது தந்தை, தாய், சகோதரி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மகிழ்ச்சியில் அவரது தாய் செய்தியாளர்களிடம்,

தற்போது பரோலில் வெளிவந்திருக்கும் பேரறிவாளன் விரைவில் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்று தான் நம்புவதாகவும் பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூறினார். திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

Leave a Response